ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர் ராஜா முத்துப்பாண்டி (கோவில்பட்டியைச் சேர்ந்தவர்). சர்வதேச அரங்கில் சாதனை படைத்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்துப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது ராஜா முத்துப்பாண்டி தான் வென்ற காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் பெருமையுடன் காண்பித்தார். அவரது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டிய சிம்ரன், இது தொடக்கம் மட்டுமே என்றும், மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!
வீரரின் சொந்த ஊரான கோவில்பட்டி குறித்தும், அவரது குடும்பப் பின்னணி குறித்தும் அன்பாக விசாரித்த சிம்ரன், அந்த ஊருடன் தனக்குள்ள சினிமா நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். சந்திப்பின் இறுதியில் இருவரும் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

