திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன நேரம் குறைக்கப்பட்டது குறித்த வதந்திகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் விளக்கம் அளித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் பரவின. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!
இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசன நேரம் குறைக்கப்படவில்லை என்றும், வழக்கமான நேரங்களிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. பக்தர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எப்போதும் போலப் μபக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோயில் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

