இடுக்கு பிள்ளையார் கோயில் மற்றும் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோயிலின் பாதுகாப்பையும் கூட்ட நெரிசலையும் ஒழுங்குபடுத்துவதற்காகப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், குறுகலான பகுதி என்பதால் எவ்வித அசம்பாவிதமும் தவிர்க்கப்படுவதை உறுதி செய்யவும் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா.. அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவு..!
இடுக்கு பிள்ளையார் கோயிலில் உள்ள குறுகிய குகைப்பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது, உடல் பருமன் காரணமாக ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் குகைக்குள் சிக்கி மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு பெண் பக்தரும் அதே இடத்தில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கைப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில், “உடல் பருமன் உள்ளவர்களுக்கும், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை” எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகலான குகைப் பாதையில் பக்தர்கள் யாரும் ஆபத்தான முறையில் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

