பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து அரசு மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், இதில் 100 சதவீத நடவடிக்கை உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் உறுதியளித்துள்ளார். கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நிலங்கள் அனைத்தும் முழுமையாக மீட்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கூகுள் பே மூலம் 7.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்.. போலீசாரின் மின்னல் வேக சோதனை..!
கோயில் நிலங்கள் தொடர்பான வருவாய் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் எவ்விதமான குளறுபடிகளும் ஏற்படாதவாறு, நிர்வாகம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை அரசு உறுதி செய்யும். இது தொடர்பாகத் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பூர்வ விசாரணைகளை விரைவுபடுத்தி, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கப் பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

