தேவையான பொருட்கள்
- அவல் (தடித்தது அல்லது மெல்லியது) – 1 கப்
- ரவை – 1/2 கப்
- தயிரோ அல்லது மோர் – 1/2 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
- இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)
- கடுகு, உளுந்தம் பருப்பு – தாளிக்க
- கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பணியாரம் ஊற்ற
செய்முறை
Step 1: அவலை நன்கு கழுவி, தயிர் அல்லது மோர் சேர்த்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அவல் ஊறியதும், அதனுடன் ரவை, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து இட்லி மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ளவும்.
Step 2: ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். கடைசியாகக் கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
அம்மன் வழிபாட்டிற்கு உகந்த பால் கொழுக்கட்டை.. செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?
Step 3: பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றவும். மாவை ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி
Step 4: துருவிய தேங்காய் (1/2 கப்), பொட்டுக்கடலை (2 டேபிள் ஸ்பூன்), பச்சை மிளகாய் (2), இஞ்சி (சிறிய துண்டு), பூண்டு (1 பல்), உப்பு. இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும். கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் சுவையான தேங்காய் சட்னி தயார்.

