கடந்த மாதம் வரை ஒரு கிலோ முதல் தர ஊட்டி பூண்டு ரூ. 250-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் அதன் விலை இருமடங்காக உயர்ந்து, அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 500 முதல் ரூ. 550 வரை விற்பனையாகிறது.
மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் ஏல முறையில் விற்கப்படும் இந்த பூண்டுக்கு, தற்போது வரத்து குறைவாக இருப்பதும், அதேசமயம் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து விதைக்காக (Seed) பூண்டு வாங்க ஏராளமான வியாபாரிகள் வருவதாலும் விலை அதிகரித்துள்ளது. நீலகிரி பூண்டு அதன் அதிக காரத்தன்மை மற்றும் மருத்துவ குணத்திற்காகப் பெயர் பெற்றது.
கரூர் வருகை தந்த முதல்வர் விஜய்.. அட்லஸ் மைதானத்தில் மக்கள் சந்திப்பு..!
பொதுவாக, முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு சமையல் தேவைக்கும், இரண்டாம் போகத்தில் (ஏப்ரல், மே மாதங்களில்) அறுவடை செய்யப்படும் பூண்டு விதைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது விதைக்கான தேவை அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் பாலாடா போன்ற பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு சாகுபடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

