Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!
    தமிழ்நாடு

    மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-ramadoss-tneb-gangman-workers-statement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மின்சார வாரிய கேங்மேன்களைக் கள உதவியாளர் மற்றும் வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், காலியாக உள்ள கள உதவியாளர்கள், வயர்மேன் ஆகிய பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கேங்மேன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்றாலும் கூட, அதை ஆய்வு செய்ய மின்வாரியம் முன்வராதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நீண்டகாலமாக களப்பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தான் கேங்மேன் எனப்படும் கடைநிலை தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 9613 பேர் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் பணியில் நியமிக்கப்பட்டனர். இரு வருடப் பயிற்சிக்குப் பிறகு ரூ.16,200 – ரூ.51500 ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்ட அவர்கள், கேங்மேன் பணிக்கான வேலைகளைக் கடந்து மின் தடை நீக்குதல், தாழ்வழுத்த மின் தடை நீக்குதல், மின்மாற்றிகள் பராமரிப்பு, மின் கணக்கீடு செய்தல் உள்ளிட்ட கள உதவியாளர்கள், வயர்மேன் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர்.

    இந்தப் பணிகளை செய்யும் போது மின்சாரம் தாக்கி 80-க்கும் மேற்பட்ட கேங்மேன் உயிரிழந்துள்ளனர்; 200-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். கேங்மேன் என்ற பெயரில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட வயர்மேன், கள உதவியாளர் பணிகளையும் இவர்கள் தான் செய்து வருகின்றனர்.

    இத்தகைய நிலையில் காலியாக உள்ள 26,605 கள உதவியாளர்கள், 14,358 வயர்மேன் பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் போது, இப்போது பணியில் உள்ள கேங்மேன்களை அந்த பணிகளில் நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் புதிதாக ஆள்களை தேர்வு செய்யலாம் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது தான்.

    கேங்மேன்களாக பணியாற்றி வருபவர்கள் வயர்மேன், கள உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியையும், பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் தேவையான கல்வித் தகுதியையும் கடந்து பட்டப்படிப்பு, முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் வரையிலான படிப்புகளையும் முடித்துள்ளனர். கேங்மேன்களை அடுத்தக்கட்ட பணிகளுக்கு நியமிப்பது குறித்து மின்வாரியம் ஆய்வு செய்யலாம் என்று நீதிமன்றங்களும், தொழிலாளர் நல அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன.

    ஆனால், மின்வாரியம் மட்டும் இவற்றையெல்லாம் செவிமடுக்க மறுக்கிறது. மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் கேங்மேன்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து 500 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணி செய்ய வேண்டியிருப்பதே அவர்களுக்கு பெரும் தண்டனையாகும். இந்த தண்டனையிலிருந்து கேங்மேன்களை மீட்கவும், அவர்களின் தகுதிக்கேற்ற பணியும், ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களை வயர்மேன், கள உதவியாளர் பணிகளில் அமர்த்த அரசு முன்வர வேண்டும். @CMOTamilnadu

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாரிய கேங்மேன்களை
    கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்!

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், காலியாக உள்ள கள உதவியாளர்கள், வயர்மேன் ஆகிய பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்ற…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 8, 2026
    Anbumani Ramadoss twitter statement 2026 PMK latest political statement PMK leader Anbumani Ramadoss Tamil Nadu electricity board updates TANGEDCO field assistant recruitment TNEB gangman employee protest TNEB wireman job vacancies அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு கேங்மேன் தொழிலாளர்கள் கோரிக்கை தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தமிழ்நாடு மின்சார வாரிய செய்திகள் பாமக அன்புமணி ராமதாஸ் அறிக்கை மின்வாரிய கள உதவியாளர் காலியிடங்கள் மின்வாரிய வயர்மேன் பணியிடங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.