சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

கொண்டாட்டத்தில் திரிஷா.. யார் கூட தெரியுமா? வைரலாகும் வீடியோ..!
கருப்பு திரைப்படம் பலமுறை ரிலீஸ் ஒத்திவிக்கப்பட்ட நிலையில், மே 15 ஆம் தேதியான உலகம் எங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரசிகர்கள் மட்டுமே துறை துறையை சேர்ந்தவர்களும் கருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தங்கம் டாக்கீஸ் தியேட்டரில் கருப்பு படத்தை பார்ப்பது போல் கனவு வந்ததும் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு உறவினர்களையும் அழைத்துக் கொண்டு 217 பேர் கருப்பு திரைப்படத்தை புக் செய்து ஒரே காட்சியில் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பலருக்கு ஆச்சிரியத்தை கொடுத்தாலும் முன்னதாக இந்த திரைப்படம் 160 முதல் 175 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

