தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மை பலத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 118 இடங்கள் தேவைப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!
இதை அடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழுக்கு வெற்றி கழகம் ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது.
116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு இடங்கள் தேவைப்படுகிறது என்று நிலையில் இரண்டு இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிகவின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை 4 மணிக்குத் தனது முடிவை அறிவிக்கிறார்.

