தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது என்றே சொல்லலாம். திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு பரபரப்பு கட்டத்தை எட்டி வரும் நிலையில், தற்போது, அதிமுகவின் எம்எல்ஏக்கள் ‘டசிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்திய போது தற்போது, சிபி சண்முகம் தலைமையில் சுமார் 36 எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திடீரென கேரளா செல்லும் ஆளுநர்.. விஜய் முதல்வராகப் போவது எப்போது?..
குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க இந்த யோசனையா அல்லது வேறு ஏதேனும் திட்டமா என்று அரசியல் வட்டாரத்தில் தற்போது குழப்பங்கள் எழுந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களின் இந்த திடீர் ஆலோசனை அக்காட்சியினர் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

