Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மனைவியுடன் சுற்றுலா செல்ல மூதாட்டி கொலை?.. கொள்ளை அடித்த பணத்தில் டூர்..!
    கோவை

    மனைவியுடன் சுற்றுலா செல்ல மூதாட்டி கொலை?.. கொள்ளை அடித்த பணத்தில் டூர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026Updated:May 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Newlywed arrested for Coimbatore elderly woman murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் மூதாட்டி கொலையில் புது மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். கொள்ளை அடித்த நகையை விற்ற பணத்தில் மனைவியுடன் சுற்றுலா சென்றதாக வாக்குமூலம் அளித்து உள்ளார். கோவை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இதில் இரண்டாவது தானத்தில் 69 வயதான கோமதி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவருடைய கணவன் தங்கராஜ் பத்திர பதிவு துறையில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்தார். இவருடைய மகள் ராதிகா லண்டனில் மருத்துவராக பணியாற்றுகிறார். மகன் சதீஷ் அமெரிக்காவில் இன்ஜினியராக உள்ளார்.

    கோமதி கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக, தனது மகள் ராதிகாவை உதவிக்காக லண்டனில் இருந்து கோவைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி கடந்த 3 ம் தேதி தனது தாயாரை பார்ப்பதற்காக ராதிகா லண்டனில் இருந்து விமான மூலம் கோவை வந்தார்.

    வீட்டுக்கு வந்ததும், வீட்டின் முன்பு கதவு சாத்தப்பட்டு இருந்தது.கதவைத் தட்டி அம்மா என்று அழைத்தார். ஆனால் வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை, இதனால் சாத்தப்பட்டு இருந்த கதவை திறந்தார். தாயார் நைட்டி உடை அணிந்த நிலையில் ஹாலில் பிணமாக கிடந்தார்.

    தாயார் அணிந்து இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது. கழுத்தில் இருக்கிய காயமும் இருந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு ராதா தகவல் கொடுத்தார். காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பெயரில், துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.


    கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது மூதாட்டி தனியாக இருந்த போது ஒருவர் துணியுடன் வந்து செல்லும் காட்சி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்தனர்.அதில் ராமநாதபுரம் 80 அடி சாலையில் வசித்து வரும் ரஞ்சித் குமார் என்பதும், சலவை தொழிலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது.

    சலவைக்காக வீடுகள் தோறும் சென்று துணிகள் வாங்கி அயன் செய்து திரும்பிக் கொடுக்கும் வேலை செய்து வந்து உள்ளார்.திருமணமாகி மூன்று மாதங்கள் ஆனவரை போலீசார் தேடிய போது மனைவியுடன் மாயமாக இருந்தார். காவல் துறையினர் தனிப்படையின தீவிர விசாரணையில் மனைவி லாவண்யாவுடன் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா சென்று இருப்பது தெரியவந்தது. தனிப்பட்ட ராமேஸ்வரத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித் குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    ரஞ்சித் குமார் போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறும் போது;
    தனது சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள மாத்தூர் ஆகும் என்றும், திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது என்றும், செலவுக்கு பணம் அதிகம் தேவைப்பட்டது. மூதாட்டி கோமதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டதாகவும், அவர் தங்க நகைகள் அணிந்து இருந்தது அந்த நகைகளை பறிக்க திட்டமிட்டதாகவும், இதனால் சம்பவத்தன்று துணி துவைக்க செல்வது போல் அந்த வீட்டுக்கு சென்றதாகவும், துணியை கையில் வைத்து கொண்டு, நகையை பறித்த போது எதிர்பாராத எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டதாகவும், உடனே துணியால் மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்று உள்ளார்.

    அந்த வீட்டில் இரண்டு செல்போன்களில் இருந்தது உள்ளது. செல்போன்களில் யாரேனும் அழைத்தால் அதன் சப்தத்தை அந்த வீட்டுக்கு யாரும் வந்து விடக் கூடாது என்பதற்காக இரண்டு செல்போன்களையும் சாக்கடையில் வீசி விட்டு நகைகளுடன் தப்பி சென்று விட்டதாக கூறி உள்ளார்.தங்க நகைகளை சொந்த ஊருக்கு சென்று ஒரு நகைக் கடையில் விற்று ரூபாய் 2 லட்சம் பெற்றதாகவும், பின்னர் மனைவிய லாவண்யாவை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் சுற்றுலா சென்றதாகவும் அதற்குள் போலீசார் பிடித்து விட்டதாகவும் கூறி உள்ளார்.

    மூதாட்டியை கொன்று அந்த நகையை விற்று தான் தன்னை சுற்றுலா அழைத்துச் சென்றது மனைவி லாவண்யாவுக்கு தெரியாது எனவும், காவல்துறையினர் கணவரை கைது செய்த போது கணவர் கொலையாளி என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறி உள்ளார். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Coimbatore Crime News Coimbatore Ramanathapuram murder Elderly woman killed Coimbatore Gold chain snatching murder Laundry worker arrested murder Newlywed man arrested Tamil Nadu crime கோவை குற்றச் செய்திகள் கோவை ராமநாதபுரம் கொலை சலவை தொழிலாளி கைது நகை பறிப்பு கொலை புது மாப்பிள்ளை கைது மூதாட்டி கோமதி கொலை வழக்கு ராமநாதபுரம் போலீஸ் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.