Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பெண்கள், குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு… வெகுண்டெழுந்த அன்புமணி!
    தமிழ்நாடு

    பெண்கள், குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு… வெகுண்டெழுந்த அன்புமணி!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Corruption and fraud are the two eyes of DMK: Anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
    சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள் கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பி ஓடிவிட்ட நிலையில், சிக்கிக் கொண்ட ஒரு சிறுமியை இரு மிருகங்களும் சிதைத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உதவுவதற்கு கூட ஆள் இல்லாமல் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த கொடிய நிகழ்வு தான் சான்று ஆகும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரிசையில் இந்தக் கொடூரமும் இணைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. நாளொரு விழாவும், பொழுதொரு கொண்டாட்டமாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் கொடூரமான சான்று ஆகும். தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள் என முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.