Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»108-தட்டுக்களில் கல்வி சீர்.. 100-வது ஆண்டு விழா; மேளதாளம் முழங்க வந்த மாணவர்கள்..!
    கோவை

    108-தட்டுக்களில் கல்வி சீர்.. 100-வது ஆண்டு விழா; மேளதாளம் முழங்க வந்த மாணவர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    student UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா 108 தட்டுக்களில் கல்விச் சீர் வழங்கிய மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களை கவுரவித்தனர்.

    கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுவந்து பள்ளிக்கு வழங்கி அசத்தினர்.

    கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் 1926-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி உள்ளது. தேசிய கீதம் இயற்றிய இரவீந்தரநாத் தாகூர் இப்பள்ளிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். இப்பள்ளி தொடங்கி இந்த ஆண்டோடு 100-ஆண்டுகள் ஆவதை ஒட்டி நூற்றாண்டு விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது.

    இதில், முதல் நிகழ்வாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108-தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள், பேனா, பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச், சாக்பீஸ், டஸ்டர், பேப்பர், மார்க்கர், நோட்புக், கடிகாரம், தம்ளர், ஸ்கேல், ஸ்டேப்ளர், பைல்கள், மேப்கள் என பள்ளிக்கும், மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டுவந்து வழங்கினர்.

    student UTV

    தொடர்ந்து நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் 100-ஆண்டுகள் ஆன வந்தேமாதரம் பாடல்கள் பாடப்பட்டன. தலைமை ஆசிரியர் ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    முன்னாள் மாணவர் கந்தசாமி பள்ளி வரலாற்றை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜாய் நிர்மலா ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சி ஆர் ஐ பம்ப்ஸ் நிறுவன பைனான்ஸ் வைஸ் பிரசிடெண்ட் முகுந்த், சி எஸ் ஆர் ஹெட் ராஜா, இடிகரை பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனன், முன்னாள் மாணவர் ஐ ஆர் கோவிந்தராஜ், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, ரங்கநாதன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தொடர்ந்து விழா சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி சார்பில் சால்வை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் இப்பள்ளி ஆரம்பிக்க உதவியவர்களின் குடும்பத்தினர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளியில் 100 சதவிகித வருகைப்பதிவு உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மேலும், கட்டுரை போட்டி, ஓவியம் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் இருந்து இந்த ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் தற்போது பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜனுக்கு ஆசிரியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் வழங்கி புதிய சுழல் கோப்பை இந்த ஆண்டு குறிஞ்சி அணிக்கு வழங்கப்பட்டது. மருதம் அணிக்கு சிறந்த அணிவகுப்பு நடத்தியதிற்காக கோப்பை வழங்கப்பட்டது.

    உடல்கல்வி ஆசிரியர் நாகராஜ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைதார். மேடை நிகழ்ச்சிகளை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தினேஷ்குமார் தொகுத்து வழங்கினார். கலை நிகழ்ச்சிகளை இசை ஆசிரியர் திலீப்குமார் ஒருங்கிணைத்தார்.

    பட்டதாரி ஆசிரியர் செந்தாமரை நன்றி கூறினார். இந்நிகச்சியில் மாணவ, மாணவிகள், அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    100வது ஆண்டு விழா 108 தட்டுகள் நிகழ்வு Centenary Celebration Tamil Education Reform Celebration School Centenary Event Tamil Nadu School News கல்வி சீர் திருத்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.