Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது.. சமூக நீதி வேஷம் போடும் முதல்வர் : அன்புமணி காட்டம்!
    தமிழ்நாடு

    சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது.. சமூக நீதி வேஷம் போடும் முதல்வர் : அன்புமணி காட்டம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Corruption and fraud are the two eyes of DMK: Anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.

    சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு.

    ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மராட்டியத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை. அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது. ஆனால், இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    The Chief Minister is masquerading as social justice Says Anbumani

    ஐந்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார்.

    அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 31.03.2022ஆம் நாள் ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1423 நாள்களாகியும் இன்று வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்த வில்லை.

    இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் சமூகநீதிக்கு துரோகத்தை மட்டும் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூகநீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics அரசியல் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.