Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»” பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார்”
    தமிழ்நாடு

    ” பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார்”

    Prime ReporterBy Prime ReporterJanuary 10, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட உக்கடம் கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி 7வது வீதி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் இன்று (10.012026) துவக்கி வைத்து பார்வையிட்டார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். நோயின்றி நலமுடன் வாழ குழந்தைகள், முதியோர்கள். பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக, மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம். இன்னுயில் காக்கும் 48 என்ற சாலை விபத்திற்கான சிறப்பு திட்டம். முதலமைச்சரின் விரிவாக காப்பீட்டு திட்டம். இதயம் காப்போம். சிறுநீரகம் காப்போம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பாதம் காப்போம் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், முதல்வர் மருந்தகம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    அந்த வகையில், பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இச்சிறப்பு மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இன்றைய தினம் (10.012026) மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட உக்கடம் கெம்பட்டி காலனி ஒக்கிலியர் காலனி, 7வது வீதி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

    மேலும், இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது மூக்கு, தொண்டை சிகிச்சை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய் தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம். ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம். குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றது.

    முன்னதாக, இம்மருத்துவ முகாமில் 27 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினையும் மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார். மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 4 எண்ணிக்கையிலான நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மொத்தம் 10251 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளார்கள் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இந்நிகழ்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சுமதி. பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், நகர் நல அலுவலர் மோகன், உதவி ஆணையர் செல்விநித்யா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் தனபாலன். ஜெயபார்வதி. மாநகராட்சி அலுவலர்கள் மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Coimbatore Health Updates Coimbatore Medical Camp DMK News Ganapathy Rajkumar MP MP Ganapathi P Rajkumar Multi Specialty Health Camp Namma Kovai Public Health Drive TN Health Department கணபதி ராஜ்குமார் எம்பி கோவை செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.