Browsing: கோவை குற்றச்செய்திகள்

கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.

கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை பதிவு செய்து, கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி, வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற மூன்று நபர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாகனத் தவணைக்கு பணம் தராததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக்கொன்ற இருவருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையில் 4-வது திருமணம் செய்ய இருந்த பெண்ணுடனான கள்ளக்காதல் தகராறில், ஹோட்டல் அதிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பேருந்து பயணத்தின் போது தொழிலாளியின் பையில் ஃபெவிக்விக் ஊற்றி, ஜிப்பை ஒட்டி ₹5.20 லட்சம் திருடப்பட்ட நூதனச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.