Browsing: கோவை

கோவையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி, இளைஞர் காரின் கூரை மீதே பறந்து விழுந்த திக் திக் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

சூலூர் அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி பாலமுருகனை, ஆய்வாளர் தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்தார். உதவி ஆய்வாளர் யுவராஜ் காயமடைந்த நிலையில், ரவுடி மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.

வாகனத் தவணைக்கு பணம் தராததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக்கொன்ற இருவருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையில் 4-வது திருமணம் செய்ய இருந்த பெண்ணுடனான கள்ளக்காதல் தகராறில், ஹோட்டல் அதிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பேருந்து பயணத்தின் போது தொழிலாளியின் பையில் ஃபெவிக்விக் ஊற்றி, ஜிப்பை ஒட்டி ₹5.20 லட்சம் திருடப்பட்ட நூதனச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலத்திலும் திடீரென ஏற்பட்ட கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது; இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விஜய் அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என்பது வெறும் யூகமே; 2026 தேர்தலில் அதிமுக தான் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பொள்ளாச்சி ஜெயராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால் பகுதி சோகத்தில் மூழ்கியது; போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.