Author: Prime Reporter

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட இவ்வளவு இழுத்தடிப்பு செய்யும் அளவிற்கு அந்த படத்தில் ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார். மேலும், “‘ஜனநாயகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ, நெருக்கடி கொடுக்கும் அளவிலோ அந்த படத்தில் ஒன்றும் இல்லை” என்றும் கூறினார். தமிழ் மொழி தொடர்பாக சீமானை குறித்து சுபவீர பாண்டியன் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “உயிரோடு இல்லாதவர்களை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று பதிலளித்தார். திருப்பரங்குன்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் உயிரோடு இருப்பவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு விளக்கேற்றுவது பற்றி பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Read More

காலை உணவுத் திட்டத்தைப் போலவே, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் லேப்டாப் என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், இந்தத் திட்டம் உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு இது முக்கிய காரணமாக இருந்ததாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளாக இலவச லேப்டாப் வழங்கவில்லை என்றும், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அத்தியாவசியமாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டு…

Read More

விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ப்ரீ புக்கிங்கில் இதுவரை ஜனநாயகன் படம் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் இது அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை பார்த்த முக்கிய புள்ளிகள் முதல் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். படத்தை பார்த்த அவர்கள், விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இது சிறந்த படம் என்றும், ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளதாகவும், 3 மணி நேரம் பட நீளம் இருந்தாலும், போர் அடிக்கவில்லை, விறுவிறுப்பாக கதை நகர்வதாக கூறியுள்ளனர்.

Read More

கோவை மாநகர் பீளமேடு பகுதியில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் காரை வேகமாக தாறுமாறாக ஓடியுள்ளார். காரை ஓட்டிய நபர் இருசக்கர வாகனங்கள் மீதும் பக்கவாட்டு சுவர்கள் மீதும் மோதியதாக தெரிகிறது. எனவே சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள் காரை சுற்றி வளைத்து வாலிபரை தாக்கினர். மேலும் காரின் கண்ணாடிகளையும் உடைத்து, அந்த வாலிபரை வாகனத்தில் இருந்து இறங்க செய்தனர். அப்போது அந்த வாலிபர் காரின் மீது ஏறிக்கொண்டு கீழே வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அவரை பிடித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காரையும் பறிமுதல் செய்து பீளமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர். காரை ஓட்டி வந்த இளைஞன் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த நிலையில், அவர் மது போதையில் இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது போதை பொருளை பயன்படுத்தி இருக்கிறாரா என்று மருத்துமனைக்கு…

Read More

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, திமுக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது இது குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு…

Read More

தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் நிலையில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளப்போகும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடித்துள்ள திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்த திரைப்படத்திற்கு ஏதேனும் தடைகள் ஏற்படுத்தப்படுமானால், அதனால் அப்படிச் செய்பவர்களுக்கு எந்தவிதமான வலுவும் சேராது என்றும், இத்தகைய சூழ்நிலை எங்கு ஏற்பட்டாலும் அது வேதனைக்குரியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். நாளை முதலமைச்சராக ஆகப் போகும் ஒருவரின் திரைப்படத்தைத் தடுக்க முயற்சிப்பது சரியான செயல் அல்ல என்றும் அவர் விமர்சித்தார். இதுபோன்ற விஷயங்களை யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், கட்சி சார்பில் இதுவரை வழக்கு உள்ளிட்ட எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் செங்கோட்டையன் விளக்கினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் பெரியார் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்றும்,…

Read More

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து, திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், “தமிழகம் தலைநிமிர… தமிழனின் பயணம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்தின் நிறைவு விழா, புதுக்கோட்டை பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா,அதிமுக – பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும்,2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி இணைந்து போட்டியிட்டிருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் எனக் கூறினார்.வரும் நாட்களில்…

Read More

பல திறமையாளர்களை வெளிகொண்டு வந்த நிகழ்ச்சி சரிகமப. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமா சீசன் 5ல் கோவையை சேர்ந்த போட்டியாளர் சுஷாந்திகா டைட்டில் வின்னரானார். இந்த நிகழ்ச்சியில் பலரையும் தனது குரலால் கவர்ந்தவர் பவித்ரா. கணவனை இழந்து தனது மகளை வளர்த்து வரும் பவித்ராவின் சொந்தக் கதை சோகக்கதையே. அதையெல்லாம் தாண்டி தனது வாழ்வின் ஒட்டுமொத்த கனவை வெல்ல வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பவித்ரா, அஞ்சு வண்ண பூவே பாடலை பாடி மிகவும் பிரபலமானார். ஏழ்மையான பவித்ராவுக்கு இந்த நிகழ்ச்சி அவரது மகளுக்கு பல உதவிகள் வந்தன. தற்போது பவித்ரா வெள்ளித்திரையில் ஒரு பாடலை பாட உள்ளார். டி இமான் அவருக்கான வாய்ப்பை கொடுத்துள்ளார். விரைவில் என்ன படம். என்ன பாடல் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.

Read More

திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள முத்தையன் கோயில் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ குப்பைகளை அகற்றும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து அந்த பகுதி பொதுமக்களுடன் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளை குப்பையின் மேலே ஏறி நின்று பார்க்கச் சொன்னார் .தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் குப்பைகளை இயந்திரம் கொண்டு அள்ளி வருகிறார்கள். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ந்து கூறிவந்தேன். இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குப்பைகள் அள்ளபடவில்லை வழியாக செல்லும் பொழுது பொதுமக்கள் தன்னை தடுத்து கேட்பதாகவும் ,இதன் காரணமாகவே உடனடியாக குப்பைகளை அல்ல வேண்டும் என தன் தர்ணா…

Read More

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி, தயாரித்த படம் துருவ நட்சத்திரம். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 2010ல் முதலில் சூர்யா கமிட்டாகி நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களாக அவர் விலக, விக்ரம் இணைந்திருந்தார். மீண்டும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. நிதி பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனை காரணமாக படம் வெளியாகுமா என்ற சூழல் எழுந்தது. துருவ நட்சத்திரம் ஆடியோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருந்தது. ஆனால் படம் இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட தேதியை மீறி தடைபட்டது. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீட்டிற்கான பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Read More