Close Menu
    What's Hot

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ்.. எந்த நேரத்தில் எதைக் குடிக்க வேண்டும்?..

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”இலவச லேப்டாப் திட்டத்தில் ஏமாற்று நாடகம் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு”
    தமிழ்நாடு

    ”இலவச லேப்டாப் திட்டத்தில் ஏமாற்று நாடகம் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு”

    Prime ReporterBy Prime ReporterJanuary 6, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காலை உணவுத் திட்டத்தைப் போலவே, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் லேப்டாப் என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், இந்தத் திட்டம் உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு இது முக்கிய காரணமாக இருந்ததாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளாக இலவச லேப்டாப் வழங்கவில்லை என்றும், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அத்தியாவசியமாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது தேர்தலை முன்னிட்டு மீண்டும் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்குவது போல நாடகம் நடத்துவதாகவும், இதற்காக திரைப்படத் துறையினரை அழைத்து விளம்பர படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோலவே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி, அதிமுக ஆட்சியில், திருவான்மியூர் அரசு பள்ளியில் அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்ததாகவும், ஆனால் அந்தத் திட்டம் திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    அதேபோன்று, தற்போது இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்றும், இது வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்யப்படும் அரசியல் நாடகம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த மோசடிகளை மாணவர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிந்துள்ளதாகவும், இன்றைய இளம் தலைமுறையை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும், வரும் தேர்தலில் திமுக அரசு வீழ்த்தப்படும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

    2026 சட்டமன்றத் தேர்தல் AIADMK vs DMK Election Stunt EPS Speech Fake Laptop Scheme Messages Free Laptop Scheme Scam MK Stalin Laptop Scheme Opposition Allegations Tamil Nadu Election 2026 Tamil Nadu Politics Ulagam Ungal Kaiyil Scheme Vanathi Srinivasan இலவச லேப்டாப் திட்டம் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு ஏமாற்று நாடகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026
    Don't Miss

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பிறகு, விரலில் வைக்கப்பட்ட மையின் தரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் எழுப்பியுள்ள புகார் குறித்த விவரங்கள்.

    இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ்.. எந்த நேரத்தில் எதைக் குடிக்க வேண்டும்?..

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.