தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தனக்காக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அடுத்தடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
கடைசியாக இவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

D55 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தனுஷின் Wonder bar Studio தயாரிக்கிறது. ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளார். இருவரும் மாரி 2 படத்தில் ஏற்கனவே நடித்திருந்தனர். மேலும் இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

