இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
அப்போது மாணவர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் இருந்து பட்டத்தை வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வரிசையில் நின்றிருந்த மாணவர், ஆளுநர் பட்டம் வழங்கும் போது, முதல்வர் படத்தை இணைத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தொடர்ந்து வந்த மாணவர்கள் சோதனைக்கு பிறகே மேடையேற்றப்பட்டனர்.

ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மாணவி மறுத்திருந்த சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

