தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு விவகாரம் தற்போது தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியுள்ளது. தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவின் உருவ அமைப்பைக் குறிப்பிட்டு அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி புகார் அளிக்கள்ளது.
பணம் கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக சவால்..!
அரசியல் நாகரிகத்திற்கும், தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கும் எதிராகப் பொதுவெளியில் ஒரு பெண் வேட்பாளரைத் தனிப்பட்ட முறையில் உருவக்கேலி செய்து பேசியிருப்பது வண்டிக்கத்தக்கது என தவெகவினர் தங்களது புகாரில் சுட்டிக்கட்டியுள்ளனர். தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தரப்பு வலியுறுத்தியுள்ளது. இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தப் புகார் விவகாரம் அரசியல் களத்தில் பெரும் தீப்பைக் கிளப்பியுள்ளது.

