தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) முதன்முறையாக அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்றுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய கூட்டங்களில் தவெக தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோருவது மற்றும் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. த.வெ.க தரப்பில் பிரதிநிதிகளாக ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த இந்தக்கூட்டத்தின் முடிவு தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

