சென்னையில் வளர்ப்புப் பிராணிகளைச் சாலையில் தவிக்கவிட்டுச் செல்லும் முரட்டுத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடியான புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளைத் தெருக்களிலோ அல்லது பொது இடங்களிலோ அநாதையாக விட்டுச் செல்லும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் தீர்மானம் பரிசீலனையில் உள்ளது.
ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!
தொடக்கத்தில் இந்த அபராதத் தொகை ரூ.25,000 வரை வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நிலைக்குழுக்களின் பரிந்துரைகளின் படி அது ரூ.10,000-மாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பிராணிகள் பாதுகாப்பு விதிகளைச் பலப்படுத்தவும் மாநகராட்சி ஏற்கனவே மைக்ரோசிப் முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.
பிராணிகளைக் கைவிடும் நபர்களைக் கண்டறியும் பட்சத்தில், மண்டல கால்நடை மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் POS இயந்திரங்கள் வழியாக நேரடியாக இந்த அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.

