தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகியும், ரசிகர்களின் நெஞ்சங்களில் ‘நேஷ்னல் க்ரஷ்’ என இடம்பிடித்தவருமான ராஷ்மிகா மந்தனா, தற்போது பான்-இந்தியத் திரைப்படமான ‘மைசா’ (Mysaa) மூலம் மீண்டும் ஒரு மிரட்டலான தோற்றத்தில் திரையரங்குகளில் வலம் வரத் தயாராகி வருகிறார். ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான மற்றும் திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கேரளக் காடுகளின் அடர்ந்த பகுதிகளிலும், ஆபத்தான மலை உச்சிகளிலும் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய ராஷ்மிகா, “இந்தப் படத்துக்காக நான் என் உயிரையே கொடுத்து உழைத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, 90 அடி உயரமுள்ள அதிரப்பள்ளி அருவியில் இருந்து குதிக்கும் காட்சியிலும், நாள் முழுக்க தண்ணீருக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழலிலும் தாம் அடைந்த பயம் குறித்தும், உயரத்தின் மீது தனக்கு இருக்கும் பயத்தைப் போக்கிவிட்டு எப்படி நடித்தேன் என்பதையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கடுமையான சவால்கள் குறித்துப் பேசுகையில், சேறு நிறைந்த பகுதியில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதும், மலையுச்சியில் முழு வேகத்தில் ஓடச் சொன்ன இயக்குநரின் கட்டளைகளும் தமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார். இயக்குனர் தனது கனவுப் படத்தை உருவாக்குவதில் காட்டிய தீவிரத்தைப் பார்த்தே தாமும் எல்லாவற்றையும் தாங்கி நடித்ததாக அவர் கூறினார்.
“வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!
இத்தனை இன்னல்களுக்கும் மத்தியில், டான்ஸ் ஆடும் போது ஏற்பட்ட விபத்தால் இடுப்பு தசைநார் (Torn Muscle) கிழிந்துவிட்டதாகவும், இது பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு வரக்கூடிய காயம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக ராஷ்மிகா கூறினார். இன்னும் 12 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில், இந்தச் கடுமையான காயத்துடனும் அவர் நடித்துக் கொடுத்துள்ளார். தனது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக வழங்கியுள்ள ‘மைசா’ படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் புதிய சினிமா அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

