சினிமா வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்கள் மற்றும் பிரத்யேக செயலிகள் மூலம் தாங்களே ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதற்கான புதிய வணிக வழிகளைப் பல பிரபலங்கள் பின்பற்றி வருகின்றனர். அந்த வரிசையில், கிரண் ரத்தோட் தனது கவர்ச்சி மற்றும் பிரபலத்தைப் பயன்படுத்தி ஒரு வணிக நிறுவனத்தைப் போல இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளார்.
இதற்கு முன்னரும் அவர் தனது சொந்த ஆப் (App) மற்றும் சப்ஸ்கிரிப்ஷன் முறைகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சாட்டிங் மற்றும் வீடியோ காலிற்காக சுமார் ரூ.1 லட்சம் கட்டணம் வசூலிப்பது சாதாரண ரசிகர்களைச் சென்றடையாது என்றும், இது முழுக்க முழுக்கப் பணக்கார ரசிகர்களை இலக்காகக் கொண்ட வணிகம் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!
மேலும், சினிமா பிரபலங்கள் இதுபோன்று பணத்திற்காகத் தனிப்பட்ட பிரைவேட் கம்யூனிட்டிகளை உருவாக்குவது எந்த அளவுக்கு நியாயமானது என்ற விவாதமும் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

