கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான, மதுக்கரை, புதுப்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காட்டு விலங்குகள் உள்ளது. இவைகள் பெரும்பாலான நாட்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதில்லை ஆனால் தற்போது கோடை மழை பொய்த்து போனதால், வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு போதிய உணவுகள், தண்ணீர்கள் கிடைப்பதில்லை.
வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்காக அமைக்க பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் கூட வனத்துறையினர் தண்ணீர்களை நிரப்பி வைத்து வருகின்றனர் ஆனாலும் உணவு பற்றாக்குறை காரணமாக பல்வேறு வன விலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இன்று மதுக்கரை அடுத்த புதுப்பதி பகுதியில் உள்ள நீரோடையில் தாய், மற்றும் குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் கூட்டம் தண்ணீரில் நீண்ட நேரம் விளையாடி, மகிழ்ந்தது.
25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!
இதனை தொடர்ந்து ஊர்பகுதிக்குள் வந்த யானை, மற்றும் அதன் குட்டியை கண்ட அந்த பகுதி மலைவாழ் மக்கள் பார்த்து போ சாமி, பார்த்து போ என்று கூறி அதனை அனுப்பினார். இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

