ஜேசன் சஞ்சய் சினிமாவுக்குள் நுழைவதற்கு அப்பா விஜய் எந்தவித சிபாரிசும் செய்யவில்லை என்றாலும், “உனக்கு என்ன வேண்டும் என்று நீயே முடிவு செய்துவிட்டு வந்து என்னிடம் கேள், நான் செய்து தருகிறேன்; நானாக வந்து உனக்கு இதுவேண்டுமா அதுவேண்டுமா என்று கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று விஜய் முழு சுதந்திரம் அளித்ததாக ஜேசன் சஞ்சய் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
ட்ரெய்லர் வெளியீட்டு மேடையில் பேசிய அவர், தனது தாய்க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது தந்தை விஜய்க்கும் நன்றி தெரிவித்தார்.
ஊர்வாயை மூட முடியாது.. மேடையில் அட்லி கொடுத்த மாஸ் ஸ்பீச்..!
ஒரே மேடையில் தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் அவர் குறிப்பிட்டுப் பேசியது, சமூக வலைதளங்களில் பரவிவந்த குடும்ப வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

