‘வதந்தி’ வெப் தொடர் மூலம் அறிமுகமாகி, ‘லப்பர் பந்து’ மற்றும் லோகேஷ் கனகராஜ் படமான ‘டிசி’ (DC) உள்ளிட்ட படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அண்மையில் அளித்த பேட்டியில் தான் நடிக்கும் படங்கள் குறித்து ஓப்பனாகப் பேசியுள்ளார்.
தனக்குத் தவறாகத் தோன்றும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலோ அல்லது கவர்ச்சியான வேடங்களிலோ தான் எப்போதுமே நடிக்க மாட்டேன் என்று அவர் கறாராகத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கதையைக் கேட்கும்போது ஒரு நடிகையாக யோசிக்காமல், ஒரு சாதாரண ரசிகையாகப் பார்த்தே அந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..
திரையில் தோன்றும் நேரத்தை விட, கதாபாத்திரம் கதைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையே தான் பார்ப்பதாகவும் சஞ்சனா கூறியுள்ளார்.

