தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவமாகும் தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழர்களின் பாரம்பரியமான தாய்மாமன் சீர்மறையைப் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் 28, 2026 அன்று முதலமைச்சர் மு. ஜோசப் விஜய்யால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22, 2026 முதல் பிரசவத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க மோதிரம் மற்றும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகத்துடன் (Tamper-proof Packaging) நேரடியாக வழங்கப்படவுள்ளது.
காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!
PICME தளத்தில் பதிவு செய்து RCH அடையாள எண் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தாய்மார்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியானவர்கள்.

