தமிழ் சினிமாவில் கிளாமர் இல்லாமல் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகை தேவயானி. ‘காதல் கோட்டை’, ‘சூர்யவம்சம்’, ‘ப்ரெண்ட்ஸ்’ போன்ற படங்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
உச்சத்தில் இருந்தபோது இயக்குநர் ராஜகுமாரனைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட தேவயானி, தற்போது தன் குடும்பத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
லண்டனில் விஜய்யும் சங்கீதாவும் சந்தித்தார்களா?.. உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்..!
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜகுமாரன், “இந்த மோசமான உலகத்தில் குழந்தைகள் எதற்கு என்றுதான் நான் நினைத்தேன்; ஆனால் தேவயானியின் வற்புறுத்தலால்தான் குழந்தை பெற்றுக்கொள்ளச் சம்மதித்தேன்” எனத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

