இந்தியாவின் இசை அடையாளமான பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் (Biopic) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தி மியூசிக் அகாடமியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தனித்துவமான இயக்கத்திற்காகப் பாராட்டப்படும் கௌதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார். மேலும், அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
கண்ணழகின்னா சும்மாவா?.. மீனாவின் சொத்து மதிப்பை கேட்டு மயங்கிப் போன ரசிகர்கள்..!
பல ஆண்டுகளின் தொடர் முயற்சி மற்றும் குடும்பத்தினரின் ஆலோசனைகளுடன் உருவாகும் இப்படம், எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஆன்மிகப் பயணம், போராட்டங்கள் மற்றும் இசை மரபு ஆகியவற்றைச் சர்வதேசப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமாகத் தயாராகிறது.

