தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரசித்தி பெற்ற கோயில்களில் செல்போன்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நடைமுறையில் இருந்தாலும், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு விசேஷ நாட்களில் பக்தர்களின் வசதிக்காகச் செல்போன் தடையிலிருந்து தளர்வு அளிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திருவிழாக் காலங்களில் கோயில்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களிடம் செல்போன்களை வாங்கிப் பாதுகாப்பாக வைப்பதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க இந்நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது.
விஜய் சேதுபதி பேச்சுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.. அதிரடி விளக்கம் தந்த டிவி..!
கோயில்களின் ஆன்மீகச் சூழலைப் பேணவும், சமூக வலைதள ரீல்ஸ் (Reels) எடுப்பதைத் தவிர்க்கவும் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

