பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இலக்கிய உலகத்திற்கும், பட்டிமன்ற மேடைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் போற்றத்தக்கது.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பட்டிமன்றங்கள் மூலம் இலக்கண, இலக்கியங்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த பிரபல பேச்சாளரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சாலமன் பாப்பையா தனது 90 வது வயதில் காலமானார்.
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு..!
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், உலகளவில் பாயிரங்கள் பல பாராட்டும் வகையில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்குப் பல்லாண்டுகளாகப் பங்களிப்பு வழங்கி, பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆளுமைகளுக்கு இறுதிச் சடங்கின் போது அரசு மரியாதை செலுத்துவது மரபு. சாலமன் பாப்பையா பட்டிமன்றங்கள் மூலமாகவும், திருக்குறள் எளிய விளக்கங்கள் மூலமாகவும் தமிழ் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதால், அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் வலுவாக எழுந்தது.
சில காலத்திற்கு முன்பு அவர் அளித்த பேட்டிகளில் அரசியல் நிலவரங்கள் குறித்தும், குறிப்பாக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
லண்டன் பறந்த கீர்த்தி சுரேஷ்.. திடீர் பயணத்தால் இணையத்தில் வலம்வரும் விவாதங்கள்..!
இந்த சூழலில், தற்போதைய அரசியல் சூழலுக்கும் அவரது மறைவுக்கும் தொடர்பை ஏற்படுத்திச் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருவது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

