நடிகை கீர்த்தி சுரேஷ் விமான நிலையம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு யூகங்களை முன்வைக்கத் தொடங்கினர்.
குறிப்பாக, மற்ற சில பிரபலங்களும் அடுத்தடுத்து லண்டன் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் சில இணைப்புகளைக் கற்பனை செய்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
நடிப்புக்கு ஆஸ்கார் கொடுக்கலாம்.. ஜெயம் ரவி விவகாரத்தில் ஆர்த்தி ரவி அட்டாக்..!
கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர்களும் சினிமா வட்டாரத்தினரும் இந்த வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் தனது வழக்கமான திரைப்படப் பணிகள் மற்றும் தனிப்பட்ட பயணங்களின் ஒரு பகுதியாகவே வெளிநாடு சென்றுள்ளதாகவும், இதற்கும் பிற நிகழ்வுகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘டோரோதி’ படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது இந்த லண்டன் பயணம் சினிமா வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

