தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாகச் சட்டமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தும் விதமாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழக கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயலாகும் என்று அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடுகிடுவென சரிந்த சர்க்கரை விலை.. ஒரு கிலோ ரூ.58-க்கு விற்பனை..!
இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதோடு, தொடர்ந்து முறையான விளக்கம் மற்றும் மன்னிப்பு கோரி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

