கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.72 வரை விற்கப்பட்ட சர்க்கரை விலை தற்போது சுமார் 19.44 சதவீதம் வரை குறைந்து, மொத்த விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ ரூ.58 வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு, உற்பத்திப் பகுதியில் ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் வணிகர்களின் யூகபேர வணிகம் போன்ற காரணங்களால் கடந்த வாரங்களில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்திருந்தது.
அரசு வெங்காயம் அழுகிவிட்டதா? முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு..!
மத்திய அரசின் சீரான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாகச் சந்தையில் கையிருப்பு அதிகரித்து, தற்போது விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

