தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியலால் தமிழக மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதாகவும், ரூ. 5,109 கோடி கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தமிழகத்தின் கல்வித்துறை வளர்ச்சிக்கும், பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 27, 2026
தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ₹5,109 கோடியை விடுவிக்காமல்… pic.twitter.com/Pmwxn8Arv1

