ஜேசன் சஞ்சய் தந்தை விஜய் குறித்துப் பெருமையாகப் பேசியதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவின் பதிவு வைரலாகி சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பி உள்ளது. இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய் குறித்தும், அவரது அரசியல் மற்றும் திரைப்பயணம் குறித்தும் பெருமையாகப் பேசிய விஷயம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!
இந்தநிலையில், ஜேசன் சஞ்சயின் பேச்சுக் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்களிடையே உடனடியாக வைரலானது. குறிப்பாக, தந்தை குறித்த மகனின் பெருமையான பேச்சுக்குப் பின் த்ரிஷாவின் இந்த பதிவு வெளியாகி இருப்பது கோலிவுட் வட்டாரத்திலும் நெட்டிசன்கள் மத்தியிலும் பல்வேறு யூகங்களையும் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

“எந்த ஒரு சமூக நிகழ்ச்சிக்குச் சென்றாலும் முதல் 32 நிமிடங்கள் மட்டுமே என்னால் ஜாலியாக இருக்க முடியும். அதன்பிறகு எனக்கு எப்போது வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கும்” (I’m fun for about 32 minutes & then I start thinking about going home) என்ற பொருளைத் தரும் பதிவை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ஒரு சாதாரண மீம் அல்லது நகைச்சுவையான பதிவாக இருந்தாலும், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில் த்ரிஷா இவ்வளவு வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளதை நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

