நடிகர் ரவி மோகன் – கெனிஷா பிரான்சிஸ் விவகாரத்தில் ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மறைமுகப் பதிவு (Cryptic Post) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரவி மோகனைப் பிரிந்து வாழ்ந்து வரும் ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஹீல் பண்ண வர்றாங்கனு சொன்னா, ஹீல்ஸால் அடித்து விரட்டுங்கள்” என்ற தொனியில் ஒரு மறைமுகப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
ரவி மோகனின் மன அழுத்தத்தைக் குணப்படுத்தவே (Healing) அவருடன் இணைந்ததாகப் பாடகி கெனிஷா கூறியிருந்த நிலையில், ஆர்த்தியின் இந்தப் பதிவு கெனிஷாவை நேரடியாகச் சாடும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்துவரும் சூழலில், இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி வெளியாகும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் மறைமுகச் சாடல்கள் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

