டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்குப் பரவலான தேர்வுகளை வழங்கும் நோக்கில் தமிழக அரசு, புதிதாக 54 உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டாலும், நுகர்வோர் மத்தியில் குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டுமே வரவேற்பு உள்ளது. பிற மாநிலங்களில் கிடைக்கும் பல பிரபலமான மற்றும் உயர்தர மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை.
இதனால், நுகர்வோர் அண்டை மாநிலங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும், சந்தையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்ச் விஸ்கி, ஒயின், வோட்கா, ஜின், ரம் மற்றும் பிரீமியம் பீர் வகைகள் இதில் அடங்கும்.
நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!
குறிப்பாக, பீரா வகைகளான பிளாண்ட், ஒயிட், கோல்டு மற்றும் லோன் வுல்ப் போன்ற பிரபலமான பீர் பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (IMFS) மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிர்வாகக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
உற்பத்தியாளர்கள் தயாரிப்பு மற்றும் விநியோக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளதால், இவை உடனடியாகக் கடைகளுக்கு வராது. இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு புதிய பிராண்டுகள், அதன் பிறகு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். தற்போது மதுபான விலையை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்றும், அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

