அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது குறித்துப் பொதுமக்கள் புகார் அளிக்கப் புதிய வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புகார் அளிக்கும் விவரங்கள்
- வாட்ஸ்அப் எண்: 94981 80936
- மின்னஞ்சல்: dvac@nic.in
- தொலைபேசி எண்கள்: 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142
அரசின் முக்கிய உத்தரவுகள்
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பலகைகளைத் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும், இந்த வாட்ஸ்அப் புகார் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) இணையதள இணைப்பு இடம் பெறுவதை அந்தந்தத் துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..
அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ புகார் அளிக்க விரும்புவோர், இந்த முகவரிக்கு அனுப்பலாம்: இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC), எண் 293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர், சென்னை – 600016.
தமிழகத்தில் ஊழலை ஒழிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

