இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான ‘ரன்’ மற்றும் ‘சண்டக்கோழி’ படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படங்கள் முதலில் விஜய்க்காகவே உருவாக்கப்பட்டதாக லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கதையை விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கூறியபோது, விஜய் அப்போது ‘தமிழன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால், அக்கதையை விட ‘தமிழன்’ பெரிய படமாக இருக்கும் என்று கருதி அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டார்.
ரஜினி முகத்தில் துப்பிய ஸ்ரீதேவி.. வைரமுத்து பகிர்ந்த ரகசியம்..!
மாதவனை வைத்து எடுக்கப்பட்ட ‘ரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல், ‘சண்டக்கோழி’ படமும் விஜய்க்காகவே உருவானது என்று அவர் கூறியுள்ளார். ஒரு சிறந்த கதையை விஜய் தவறவிட்டது திரையுலக ரசிகர்களிடையே தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

