கோவை மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஊர் மக்களுக்கு அறிவுரை கூறிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சுமார் எட்டு வயது வட மாநில சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதவிகள் வேண்டாம்.. தலைமை மீது அதிருப்தியில் உள்ளாரா எஸ்.பி. வேலுமணி?..
நேற்று இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நேற்றிரவு அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த ஊர் மக்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.சிறுமி நன்கு மனவளர்ச்சியுடன் இருந்து இவர்தான் இது போன்ற செயலை செய்தார் என்று கூறியிருந்தால் இந்நேரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும், ஆனால் இதுபோன்று மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தான் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் யாரேனும் பொறுப்பில் விட்டு செல்ல வேண்டும் இல்லையெனில் எங்கு சென்றாலும் அழைத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளனர்.
மேலும் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த ஊர் மக்கள் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்பொழுது சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் அந்த ஊர் மக்களிடம் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

