தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஒரு தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து உரையாற்றினார். தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
காவிரி நடுவர் மன்றம் (2007) மற்றும் உச்ச நீதிமன்றத்தின் (2018) இறுதித் தீர்ப்புகளை மதிக்காமல், பிற மாநிலங்களின் அனுமதியின்றி கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது.
காவிரிப் படுகை என்பது ஏற்கனவே பற்றாக்குறையான ஒன்று என்பதால், இதில் பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா புதிய நீர்த்தேக்க திட்டங்களைத் தொடங்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!
கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை (DPR) பரிசீலிக்கவோ அல்லது அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என மத்திய நீர்வள குழுமத்தை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சட்டசபை தனது முழு ஆதரவையும், இத்தீர்மானம் மூலம் ஒருமனதாகப் பதிவு செய்கிறது.

