Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மதவாத சக்திகளை அரசு புறந்தள்ள வேண்டும்.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வன்னி அரசு கோரிக்கை..!
    தமிழ்நாடு

    மதவாத சக்திகளை அரசு புறந்தள்ள வேண்டும்.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வன்னி அரசு கோரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterJune 7, 2026Updated:June 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vanni-arasu-thiruparankundram-deepam-issue-statement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பரிய நடைமுறையைப் பாதுகாக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார். விசிகவின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,

    திருப்பரங்குன்றம் தீபம் – மதவாத Fringe Elements-ஐ அரசு புறந்தள்ள வேண்டும்! ‘பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் அரசின் கொள்கை. இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

    எந்த மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கு நூறு சதவீதம் அனுமதிக்க மாட்டோம்’ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் நேற்று (07.06.26) மதுரை செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

    ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ‘ என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு கடந்த ஜூன் 4ஆம் தேதி கேள்வி எழுப்பி உள்ளது.

    மக்கள் தொகையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள பிறப்படுத்தப்பட்ட இந்து மக்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்களின் வாழ்வாதார போராட்டங்களிலும், அவர்களுக்கு மறுக்கப்படும் சமூகநீதியை உறுதி செய்வதிலும் எந்தக் காலத்திலும் அக்கறை காட்டாத பாஜக – சங்க பரிவார் அமைப்புகள், தங்கள் மதவாத அரசியலுக்கு மட்டும் ‘ இந்து ‘ என்ற பெயரில் அவர்களை அணிதிரட்ட முயன்று வருகின்றனர்.

    சனாதனிகளின் இந்த சதியை – ஏமாற்று வேலையை நன்கு அறிந்த திருப்பரங்குன்றம் மக்கள், இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாறாக பாஜகவின் குரலாக பேசிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தலில் தக்க பதிலடி தந்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடித்துவிட்டோம் என்று வட இந்தியாவில் பெரும் மதவாத அரசியலை முன்னெடுத்த பாஜகவை, அதே அயோத்தி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அங்கு சமாஜ்வாதி கட்சியின் முன்னணி தலித் தலைவர்களில் ஒருவரான திரு. அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். இத்தகைய பதிலை தான் தமிழ்நாட்டில் மதவாத பிளவுவாத அரசியலை முன்னெடுத்த பாஜக அணிக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்களால் புறந்தள்ளபட்ட ‘Fringe Elements’-ஐ நமது தமிழ்நாடு அரசும் அவ்வாறே அணுக வேண்டும். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடருவதற்கான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருப்போம்!

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் தீபம் – மதவாத Fringe Elements-ஐ அரசு புறந்தள்ள வேண்டும்!

    'பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் அரசின் கொள்கை. இதில் மாற்றுக்கருத்து… pic.twitter.com/crfpkX39B6

    — வன்னி அரசு (@VanniTamizhVCK) June 7, 2026
    Minister CTR Nirmalkumar Madurai press Tamil Nadu government legal battle Thiruparankundram deepam case updates Thiruparankundram hill temple issue Vanni Arasu twitter statement VCK support to TN government 2026 VCK Vanni Arasu latest post அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மதுரை உச்சிப்பிள்ளையார் கோவில் தீபம் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் மதவாத சக்திகள் எதிர்ப்பு விசிக வன்னி அரசு எக்ஸ் பதிவு விசிக வன்னி அரசு அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.