சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தீவிர ஆதரவாளர் மட்டுமல்லாமல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை செயலாளர் ஆகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால், நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை அவர் மிகவும் காட்டமாகவே விமர்சித்து வந்தார். அதேபோல், நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை நடவடிக்கைகளையும் காட்டமாகவே விமர்சித்து வந்தார்.
எதிர்க்கட்சிகளை முடக்கத் தொடரும் ED ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா திமுக இளைஞரணி செயலாளர் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதியை சந்தித்து இருக்கிறார். இது தொடர்பாக, அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ஒரு நட்சத்திரம் தான் உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புவார். ஆனால், ஒரு தலைவர் தான் தன்னை சுற்றி உள்ளவர்களையும் உயரத்துக்கு கொண்டு செல்வார் என்று கேப்ஷன் இட்டுள்ளார். இவரது, இந்த புகைப்படம் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

