சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
கருப்பு திரைப்படம் பலமுறை ரிலீஸ் ஒத்திவிக்கப்பட்ட நிலையில், மே 15 ஆம் தேதியான உலகம் எங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரசிகர்கள் மட்டுமே துறை துறையை சேர்ந்தவர்களும் கருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கருப்பு படம் வெளியான 6 நாட்களில் உலக அளவில் ரூ 175 கோடியை வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான Dream Warrior Pictures தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெயிட்டுள்ளது. முன்னதாக, கருப்பு படத்தில் மொத்தமாகவே சூர்யா சுமார் 15 காட்சிகள் தான் வருவார் என்பது போல இருக்கும், ஆனால் கிளைமாக்ஸில் அவர் கருப்பனாக ஆடும் ஆட்டம் மொத்த தியேட்டரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது.

