Close Menu
    What's Hot

    மே 23: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்..!

    May 23, 2026

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உடல் சூடு முதல் குடல் புண் வரை அத்தனையுமே கியூர்.. பாதாம் பிசினின் நன்மைகள்..!
    ஆரோக்கியம்

    உடல் சூடு முதல் குடல் புண் வரை அத்தனையுமே கியூர்.. பாதாம் பிசினின் நன்மைகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    health-benefits-of-eating-badam-pisin-summer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயில் காலம் வந்து விட்டாலே ஆரோக்கிய பிரச்சனைகள் பல வகையாக வந்து அவதிக்கு உள்ளாக நேரிடும். முக்கியமாக, உடல் சூடு மலச்சிக்கல் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெப்பநிலை தான். இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், கோடையில் உடலை நீரூற்றுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு இளநீர், தர்பூசணி, நொங்கு, முலாம்பழம் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    health-benefits-of-eating-badam-pisin-summer

    இது தவிர ஒரு அருமையான மற்றொரு பொருளும் உள்ளது. அதுதான் பாதாம் பிசின். பாதாம் மரங்களின் பட்டைகளில் இருந்து வடியும் பிசினை உலர வைத்து பெறப்படுவது பாதாம் பிசின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சொல்லப்போனால், இது பாரம்பரியமாக நம் முன்னோர்களால் கோடை காலத்தில் அதிகம் உட்கொண்டு வந்த பொருள். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    முக்கியமாக பாதம் பிசின் விலை மலிவில் கிடைக்கக்கூடியது நாட்டு மருந்து கடைகளில் வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும். அளவில் குறைவான ஒரு அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்.

    health-benefits-of-eating-badam-pisin-summer

    எப்படி சாப்பிடலாம்?

    ஐந்து கிராம் பாதம் பிசினை எடுத்து இரவு தூங்கும் ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த பாதம் பிசின் ஜெல் போன்று இருக்கும். அதை மற்றொரு டம்ளரில் எடுத்து போட்டு நீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், காலையில் ஒரு டம்ளர் நீரில் பாதாம் பிசினை சேர்த்து ஊற வைத்து மாலையில் மோரில் இந்த பாதாம் பிசினை சேர்த்து குடிக்கலாம்.

    மலச்சிக்கல் நீங்கும்

    health-benefits-of-eating-badam-pisin-summer

    ஊறவைத்த பாதாம் பிசின் உடன் தேன் கலந்து குடிக்கும் போது கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். எனில், பாதாம் பிசினில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால், பாதாம் பிசினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் உட்கொண்டு வர நிவாரணம் கிடைக்கும்.

    உடல் சூடு குறையும்

    பாதாம் பிசினை தினசரி உடலில் சேர்த்து வருவதால் உடல் சூட்டை குறைக்கலாம்.

    செரிமான பிரச்சனை

    பாதாம் பிசினை ஊற வைத்து உட்கொள்ளும்போது நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

    பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பலன் வேற.. உடல் சூட்டை அடியோடு விரட்டும் ‘அந்த’ ஒரு ஸ்பூன்..!

    health-benefits-of-eating-badam-pisin-summer

    பாதாம் பிசினை யாரெல்லாம் சாப்பிடலாம்

    இந்த பாதாம் பிசினை சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். கோடையில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட இதை சாப்பிட கொடுக்கலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பாதம் பிசினை சாப்பிடும் போது தினமும் தேன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Almond gum health benefits summer Badam pisin benefits in Tamil How to eat badam pisin Natural body coolant foods Tamil இயற்கை உடல் குளிர்விப்பான்கள் குடல் புண் குணமாக உணவு கோடைகால உடல் சூடு குறைய பாதாம் பிசின் சாப்பிடும் முறை பாதாம் பிசின் பயன்கள் தமிழ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பலன் வேற.. உடல் சூட்டை அடியோடு விரட்டும் ‘அந்த’ ஒரு ஸ்பூன்..!

    May 20, 2026

    அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கிறீங்களா?.. தாகம் எடுக்குதுன்னு லிட்டர் கணக்குல குடிக்காதீங்க..!

    May 19, 2026

    வெயில் கொடுமைக்கு வெந்தயம் பெஸ்ட் சாய்ஸா?.. தப்பி தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க..!

    May 16, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026

    விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..

    May 7, 2026

    உடல் சூடு நீங்க வேண்டுமா?.. இந்த 3 பொருட்கள் இருந்தா உடம்பு குளிர்ச்சியா இருக்கும்..!

    May 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மே 23: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்..!

    May 23, 2026

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Don't Miss

    மே 23: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்..!

    May 23, 2026

    மே 23, 2026 சனிக்கிழமைக்கான துல்லியமான தினசரி பஞ்சாங்கம் மற்றும் பன்னிரு ராசிகளின் பலன்கள் அடங்கிய இன்றைய முழுமையான ராசிபலன் தொகுப்பு.

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.