கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனையை ஏராளமானோர் எதிர் கொள்வார். அந்த சமயத்தில், உடல் எடையை குறைக்க நினைப்பவரும் அதிகம். இப்படி உடல் எடையை குறைக்கும் அதே சமயம் உடல் சூட்டையும் தணிக்கும் ஒரு அற்புதமான தேடுதலுக்கு பச்சை பயிறு கஞ்சி சிறந்தது. இந்த கஞ்சியை மிகவும் சுலபமாக செய்வதோடு பிரமாதமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பச்சை பயிறு
- 75 கிராம் பச்சரிசி
- ஒன்றரை லிட்டர் தண்ணீர்
- 1/4 கிலோ வெல்லம்
- இரண்டு சிட்டிகை உப்பு
- 3 ஏலக்காய்
- கால் லிட்டர் சுடு தண்ணீர்
- ஒரு கை அளவு துருவிய தேங்காய்
செய்முறை
Step 1: முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் பச்சை பயிரை சேர்த்து நன்கு மனம் வரும் வரை அரைத்து ஒரு தட்டில் எடுத்து தனியாக வைக்க வேண்டும். பின்னர், அதே கடாயில் பச்சரிசியை சேர்த்து நன்கு பொரிய விட்டு அதையும் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பத்தே நிமிடத்தில் ரெடி.. நாவில் நீர் ஊறும் கத்திரிக்காய் கார சட்னி..!
Step 2: பின்னர் மிக்ஸி ஜாரில் வறுத்த பச்சை பயிரை சேர்த்து ஓரளவுக்கு கொரகொரவென்று அரைத்து அதே ஜாரில் வறுத்த பச்சரிசியும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து பொடியாக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை லிட்டர் நீரை ஊற்றி அத்துடன் பொடித்த இரண்டையும் சேர்த்து கட்டிகள் இன்றி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
Step 3: கஞ்சி ஓரளவிற்கு வெந்து கெட்டியாகிய தொடங்கியதும், அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து அத்துடன் ரெண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் 3 ஏலக்காயை தட்டி போட்டு நன்றாக கிளறி கால் லிட்டர் சுடு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அதில், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பச்சை பயிறு கஞ்சி ரெடி.

